கமலை தொடர்ந்து ஜாக்கி சானுடன் இணையும் சிம்பு.. விரைவில் அறிவிப்பு
STR
சிம்பு கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50 உருவாகவுள்ளது. மேலும் டிராகன் பட இயக்குநரின் இயக்கத்தில் STR 51 படத்தையும் கமிட் செய்துள்ளார். இந்த நிலையில், சிம்புவின் மற்றொரு புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் 2018 எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ஜூட் ஆண்டனி. இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில், அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
ஜாக்கி சான்
இந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால், அனைவரும் சர்ப்ரைஸ் தரும் விதமாக இப்படத்தில் உலக புகழ்பெற்ற நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜாக்கி சான் தான்.
ஆம், ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.
மணி ரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
