மீண்டும் காதலால் இணையும் சிம்பு - திரிஷா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சிம்பு - திரிஷா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் சிம்பு - திரிஷாவின் ஜோடியும் ஒன்று. இவர்கள் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் விண்னைத்தாண்டி வருவாயா.
கவுதம் மேனன் இயக்கிய இப்படம் தான் சிம்பு - திரிஷா இருவரையும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ரசிக்கவைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகும். ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாது.
விண்ணைத்தாண்டி வருவாயா
இந்நிலையில், தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இப்படத்தில் மீண்டும் காதல் ஜோடிகளாக சிம்பு - திரிஷா இணையவுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.