வெந்து தணிந்தது காடு: சிம்பு எந்த தியேட்டரில் படம் பார்க்கிறார் தெரியுமா?
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதிகாலை காட்சிகள் காலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் மட்டும் 200 தியேட்டர்களில் போடப்பட்டு இருக்கிறதாம். இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது ஹவுஸ்ஃபுல் ஆகி இருக்கிறது.
அதிகாலை காட்சிகள் பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு அதன் பின் வாருங்கள் என இயக்குனர் கௌதம் மேனன் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்.

சிம்பு எந்த தியேட்டரில் படம் பார்க்கிறார்
சிம்பு இன்று ரசிகர்களுடன் ட்விட்டர் ஸ்பேசில் உரையாடினார். நீங்கள் எந்த தியேட்டரில் வெந்து தணிந்தது காடு பார்க்க போகிறீர்கள் என கேட்டதற்கு, 'முதலில் நீங்கள் முதலில் பார்த்து படம் எப்படி இருக்கிறது என சொல்லுங்க, அதன் பின் நான் பார்க்கிறேன்' என தெரிவித்து இருக்கிறார்.
எந்த தியேட்டர் என சிம்பு பதில் சொல்லவில்லை என்பதால் அவர் சர்ப்ரைசாக சில முக்கிய தியேட்டர்களுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரோல்களால் கண்ணீர் விட்டு அழுத மனைவி: நீயா நானா சர்ச்சையில் சிக்கியது பற்றி பதில்