ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை சிம்ரன்.. தீடீரென வைரலாகும் வீடியோ
நடிகை சிம்ரன்
90ஸ் களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் சூப்பர்ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், தற்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பார்ப்புக்குரிய இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
நடிகை சிம்ரன் மற்றும் நடிகர் விஜய் இணைந்து ஆல்தோட்ட பூபதி எனும் பாடலுக்கு யூத் படத்தில் நடனம் ஆடியிருப்பார்கள். அந்த பாடலும், விஜய் சிம்ரனின் நடனமும் இன்றும் அனைவரின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், தற்போது இந்த பாடலுக்கு நடிகை சிம்ரன் மட்டுமே நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது சில மாதங்களுக்கு முன் எடுத்த வீடியோவாக இருந்தாலும் கூட, தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#AalthottaBoopathy Ft. @SimranbaggaOffc #Varisu @actorvijay #Youth ❤️? pic.twitter.com/MU2O1zdeZZ
— Namakkal OTFC (@Namakkal_OTFC) August 19, 2022