ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.. சிம்ரன் கொடுத்த மாஸ் அப்டேட்
துருவ நட்சத்திரம்
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், இப்படத்தின் மீது இருக்கும் பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்தது.
ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து நடிகை சிம்ரன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "துருவ நட்சத்திரம் முழுமையான ஆக்ஷன் படம். அதுமட்டுமின்றி படு ஸ்டைலிஷாகவும் உருவாகியிருக்கிறது.
இப்படத்தின் ரிலீஸுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக சரியான நேரத்தில் வெளியாகும். மக்கள் கண்டிப்பாக படத்தை விரும்புவார்கள். படத்தில் விக்ரமும் செம ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
