சிம்ரன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ஜோதிகா.. அதுவும் சூப்பர் ஹிட் படம்..
ஜோதிகா
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின் இவர் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான சைத்தான் படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹிட் படம்!!
சிம்ரன் நடிக்கவிருந்த ஒரு படத்தில் ஜோதிகா நடித்து மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த படம் குறித்து பார்க்கலாம் வாங்க..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
இப்படத்தில் ஜோதிகா கங்கா என்ற ரோலில் நடித்து அசத்தி இருப்பார். இந்த ரோலில் முதல் முதலில் நடிக்கவிருந்தது சிம்ரன் தானாம். ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். கடைசியில் அந்த படத்தில் ஜோதிகா நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
