சிம்ரன் பற்றி சாய் பல்லவி சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியான நடிகை
சிம்ரன்
சிம்ரன் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். விஜய், அஜித், பிரஷாந்த் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.
அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது 47 வயதாகும் சிம்ரன் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சாய் பல்லவி பேச்சால் நெகிழ்ச்சி
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை சாய்பல்லவி சிம்ரன் பற்றி பேசி இருக்கிறார். "நான் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது சிம்ரனின் ஒரு படத்தை பார்த்தேன், நான் நடிகை ஆனால் இவரை போல தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்" என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.
சாய் பல்லவி பேச்சை கேட்டு நெகிழ்ச்சி ஆன சிம்ரன் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
