சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவருடைய நடனத்திற்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் இவருடைய சுல்லதானா பாடலும் இடம் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற படம் வெளிவரவுள்ளது. வரும் மே 1-ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஜூனியர், சீனியர் பேதம்
இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணியில் சிம்ரன் சசிகுமார் உடன் ஜோடியாக நடித்தது குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒரு நல்ல குடும்ப கதையாக இருந்ததால் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி, சிறந்த இயக்குநர் மற்றும் நடிகருமான சசிகுமார் போன்ற ஒரு நபருடன் நடிப்பது எனக்கு கிடைத்த வரம். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இருக்க கூடாது. திறமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
