ஒரே நாளில் வெளியாகும் சூரி, சந்தானம், யோகி பாபு திரைப்படங்கள்.. ஜெயிக்கப்போவது யார்?
சூரி - சந்தானம் - யோகி பாபு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.
தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் வரும் மே 16ம் தேதி வெளிவர உள்ளது. ஏற்கனவே இதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் வெளியாக உள்ளது.
ஜெயிக்கப்போவது யார்?
இந்நிலையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‛ஜோரா கைய தட்டுங்க' என்ற திரைப்படமும் வரும் மே 16 - ம் தேதி வெளியாக உள்ளது. இதனால், இந்த போட்டியில் ஜெயிக்க போவது சந்தானமா? சூரியா? யோகி பாபுவா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
