மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட ஆனந்தி- நர்ஸ் சொன்னதை கேட்டு அனைவரும் ஷாக், சிங்கப்பெண்ணே புரொமோ
சிங்கப்பெண்ணே
தனுஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிங்கப்பெண்ணே.
கடந்த 2023, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 210க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனந்தி என்ற கிராமத்து பெண் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க நகரத்திற்கு வருகிறார்.
வேலை செய்வதுடன் தன்னை சுற்றிவரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதையாக நகர்ந்து வருகிறது.
பரபரப்பு புரொமோ
இந்த நிலையில் ஜுலை 30, இன்றைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்லும்போது ஆனந்தி மயக்கம் வந்து ரோட்டிலேயே விழுந்துவிடுகிறார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் கர்ப்பமாக இருப்பதாக நர்ஸ் கூறுகிறார்.
அவர் சொன்னதை கேட்டு மகேஷ், அன்பு, வாடர்ன், அவரது தோழிகள் என அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதோ அந்த பரபரப்பு புரொமோ,

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu
