ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி.. ஓப்பனாக சொன்ன படத்தின் இசையமைப்பாளர்
கேம் சேஞ்சர்
ஆந்திராவில் பிறந்த இசையமைப்பாளரும், நடிகருமான தமன், பழம்பெரும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கண்டசாலா பாலராமய்யாவின் பேரன் ஆவார்.
இவருடைய தந்தை கண்டசாலா சிவகுமார் டிரம்ஸ் இசை கலைஞர், பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.
தெலுங்கில் 2009ம் ஆண்டு மல்லி மல்லி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய தமன், தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஓபன்
கடைசியாக கேம் சேஞ்சர் படத்தை இசையமைத்துள்ள இவர் இப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " ஒரு பாடல் இசைக்கும், இசையமைப்பாளருக்கும் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. ஒரு பாடல் ஹிட்டாவது நடன இயக்குநர்களின் கைகளிலும் இருக்கிறது.

அந்தப் பாடல் திரையில் வரவேற்பை பெற வேண்டுமென்றால் நடன இயக்குநர்கள் சரியான நடன அசைவுகளை அமைக்க வேண்டும். ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களில் ரசிகர்களை கவரும் வகையில் ஹூக் ஸ்டெப்பே இல்லை. அது தான் படம் தோல்வி பெற காரணமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    