நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா?- கியூட் புகைப்படம்
பிருந்தா சிவகுமார்
இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, காரணம் இவரை சுற்றிய அனைவருமே சினிமா பிரபலங்கள் தான். இவரது அப்பா சிவகுமாரில் தொடங்கி, அண்ணன்கள் சூர்யா, கார்த்தி, அண்ணி ஜோதிகா என அனைவரும் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள் தான்.
இதனால் பிருந்தாவும் மக்களால் உடனே அடையாளம் காணப்பட்டார், ஆனாலும் அவர்களின் உதவி இல்லாமல் தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்படி இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் 2018ம் ஆண்டு வெளிவந்த சந்திரமௌலி படத்தில் பாடல் பாடியுள்ளார். அடுத்தடுத்து என இதுவரை 5 படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இப்போது தமிழில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நாயகி ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார்.
அழகிய குடும்பம்
இப்போது சினிமாவில் பாடகியாக, டப்பிங் கலைஞராக வளர்ந்து வரும் பிருந்தாவிற்கு 2005ம் ஆண்டு சிவகுமார் என்ற கிரானைட் தொழில் செய்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ அவர்களின் அழகிய குடும்ப புகைப்படம்,
மோசமான விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக பேசிய அசல் கோளாறு- வீடியோவுடன் இதோ

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
