பிரபல பின்னணி பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
பாடகர் செயச்சந்திரன்
தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன் (வயது 80).
இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், கேரள மாநிலம் திருசூரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்
மரணம்
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவருடைய மரணம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
