ஆசை காட்டி மோசம் செய்த படக்குழு.. நடிகர் விஜய்யால் பயன் இல்லாமல் போன விஷயம்

Kathick
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் நடித்த பிகில்
நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று பிகில். அட்லீ இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தில் விஜய்யின் குரலில் வெறித்தனம் எனும் பாடல் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
பயன் இல்லாமல் போன விஷயம்
இந்நிலையில், இந்த பாடலை முதன் முதலில் பாடியது சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கனேஷ் தானாம்.
முதலில் செந்தில் பாடியதை ரெக்கார்டு செய்துள்ளனர். அதன்பின், படக்குழு என்ன முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை, விஜய்யை பாட வைத்து மீண்டும் இந்த பாடலை ரெக்கார்டு செய்துள்ளார்கள்.
இதில், விஜய் பாடிய பாடல் தான் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய்க்காக, தான் பாடிய பாடலை படத்தில் காண ஆவலுடன் காத்திருந்த செந்தில் ஏமாற்றம் அடைந்தாராம்.
இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.