பெரிய ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் முத்து, மீனா, அதற்கு பின்னால் சிந்தாமணியின் சூழ்ச்சி உள்ளதா?- சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து-ஸ்ருதி அம்மாவின் வாக்குவாதம் பரபரப்பாக இருக்கும்.
என் மகள் ரெஸ்டாரன்ட் வேலைக்கு செல்ல கூடாது, அதற்கு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை இந்த செக்கில் எழுதிக்கொள்ளுங்கள் என ஸ்ருதி அம்மா கூறுகிறார்.
இதனால் முத்து-ஸ்ருதி அம்மா இடையே வழக்கம் போல வாக்குவாதம் நடக்க கடைசியில் ஸ்ருதி அம்மா தலைதெறிக்க ஓடிவிடுகிறார். நாங்களே ஸ்ருதி-ரவிக்கு ஒரு ரெஸ்டாரன்ட் வைத்து தருகிறோம் என்கிறார்.
புரொமோ
இப்படி இன்றைய எபிசோட் பரபரப்பாக செல்ல புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மீனா தனக்கு ரூ. 2 லட்சத்திற்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறி சந்தோஷப்பட இந்த விஷயத்தை விஜயா, சிந்தாமணியிடம் கூறுகிறார்.
அவரோ இந்த ஆர்டருக்கு பிறகு மீனா இந்த தொழிலை செய்ய மாட்டார், பொருந்திருந்து பாருங்கள் என்ன நடக்கிறது என்கிறார். இதோ புதிய புரொமோ,