குடும்பமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள்.. இதோ பாருங்க
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல், விஜய் டிவி TRP-யில் டாப்பில் உள்ளது.

தற்போதைய கதைக்களம்படி மனோஜ் - ரோகிணியின் விவாகரத்து வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சுலபமாக ரோகிணியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிடலாம் என விஜயா நினைத்தார். ஆனால், தன்னுடைய முதல் திருமணம் மனோஜுக்கு தெரியும் என கூறி மொத்த வழக்கையும் வேறொரு திசையில் மாற்றிவிட்டார் ரோகிணி.

மறுபக்கம், ஸ்ருதி - ரவிக்கு இடையே 'நீத்து'வால் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடன வீடியோ
கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியல் மூலம் கோமதி பிரியா, சல்மா அருண், வெற்றி வசந்த், அணிலா ஸ்ரீகுமார், ஸ்ரீ தேவா ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு குடும்பமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..