பிரேக் பிடிக்காத காரை ஓட்டி சென்ற முத்து.. உயிர் தப்பியது எப்படி! promo வீடியோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப்பில் இருக்கிறது. கடந்த எபிசோடில் முத்துவை எதாவது செய்யவேண்டும் என முடிவு எடுத்த சிட்டி, ரோகிணியின் உதவியோடு முத்துவின் காரில் பிரேக் wire-ஐ கட் செய்துவிட்டார்.
இதனால் கார் ஓட்டி செல்லும்போது கண்டிப்பாக முத்துவிற்கு விபத்து ஏற்படும் என திட்டமிட்டு இருந்தார்.
promo வீடியோ
அதன்படியே முத்து காரை ஓட்டி செல்ல, ஒரு கட்டத்தில் பிரேக் பிடிக்காமல் பள்ளி வேண் மீது கார் மோதவிருந்த நிலையில், காரை திருப்பி அருகில் இருந்த பைக் மீது மோதிவிட்டார் முத்து.
இதனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், மோதியது டிராஃபிக் போலீஸ் வண்டி மீது. ஏற்கனவே இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது பிரச்சனை முத்துவிடம் தேடி வந்துள்ளது.
இதை எப்படி அவர் சமாளிக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த promo வீடியோ..