ரோகிணி தான் க்ரிஷ் அம்மா என அறிவாளா மீனா.. பரபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் TRP-ல் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த சீரியலின் வரும் வாரத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த எபிசோட் இறுதியில் விஜயாவை அடிக்க வந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார் மீனா. இந்த நிலையில், தற்போது பரபரப்பான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க
ரோகிணி தான் க்ரிஷ் அம்மா என முத்து குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. அதனை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார். இப்படி இருக்க க்ரிஷை தனது வீட்டிற்கு முத்து அழைத்து வந்து, இனி க்ரிஷ் இங்கு தான் இருப்பான் என கூறி விடுகிறார்.
பரபரப்பான ப்ரோமோ
இரவு நேரத்தில் தனது அம்மா ரோகிணியை தேடி செல்லும் க்ரிஷ், ரோகிணியிடம் பேசிக்கொண்டு இருக்கிறான். இந்த சமயத்தில் தன்னுடைய படுத்து இருந்த க்ரிஷை காணவில்லை என, ரோகிணி அறையில் சத்தம் கேட்கவும், அங்கு சென்று பார்க்கிறார் மீனா.
இதன்பின் என்ன நடக்கப்போகிறது, ரோகிணி தான் க்ரிஷ் அம்மா என மீனா அறிவாளா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ப்ரோமோ வீடியோ..