முத்து விரித்த வலையில் மாட்டிக்கொண்ட விஜயா, மனோஜ்.. சிறகடிக்க ஆசையில் அடுத்த நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது தங்க நகை எப்படி கவரிங் நகையாக மாறியது எப்படி என்பது தான் விறுவிறுப்பான கதைக்களமாக இருக்கிறது.
இதை கண்டுபிடிக்க முத்து தனது வீட்டில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து, இது சாதாரணமான எலுமிச்சை பழம் இல்லை, சாமியார் மந்திரித்து கொடுத்தது. யார் அந்த தங்க நகையை கவரிங் நகையாக மாற்றியது என்று இந்த மந்திரித்த எலுமிச்சை பழம் காட்டிக்கொடுக்கும் என கூறியிருந்தார்.
மாட்டிக்கொண்ட விஜயா, மனோஜ்
இதனால் பயந்துபோன விஜயா மற்றும் மனோஜ் இருவரும் தூக்கம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இறுதியாக அந்த மந்திரித்தாக முத்து சொன்ன எலுமிச்சை பழத்தை எடுத்து தூக்கி போட்டு விடலாம் என எண்ணி இரவில் மனோஜ் தனது அம்மா விஜயாவுடன் பூஜை அறைக்கு செல்கிறார்.
அப்போது முத்து விரித்த வலையில் மனோஜ் மற்றும் விஜயா கையும் களவுமாக சிக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் தங்க நகையை கவரிங் நகையாக மாறியுள்ளனர் என மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது.
இதன்பின் அடுத்த வாரம் வரவிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்களில் என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த வீடியோ..