சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் மலேசியா மாமா இத்தனை தொடர்களை இயக்கியுள்ளாரா?- யாருக்கும் தெரியாத தகவல்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இப்போது கதையில் ஸ்ருதி அம்மா நினைத்ததை போல அண்ணாமலை மகன்களுக்குள் ஏசியால் சண்டை வெடிக்கிறது.
திருப்பி அனுப்பியது தவறு இல்லை யாருக்கும் தெரியாமல் நீ மட்டுமே முடிவு எடுத்து அனுப்பியது தவறு என முத்துவை கண்டிக்கிறார் அண்ணாமலை.
உடனே விஜயா இவர்களால் பிரச்சனை தான், வெளியே அனுப்புங்கள் என பழைய புராணத்தை எடுக்கிறார். இந்த வார புரொமோவில் மீனாவை வெளியே அனுப்பும் காட்சிகள் நாளைய எபிசோடில் வரும் என தெரிகிறது.

மலேசியா மாமா
இந்த தொடரில் மலேசியா மாமா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் ஜெயமணி. இவர் ஏற்கெனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் பூங்காவனமாக நடித்து மக்களை கவர்ந்தவர்.
இப்போது அவரை பலரும் மலேசியா மாமா என்று தான் அடையாளப்படுத்துகிறார்களாம். குடும்ப சூழ்நிலையால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை ஆனால் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணமான 1 வருடத்திலேயே உயிரிழந்த கணவர், 2வது திருமண நாளில் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த செயல்- புகைப்படம் இதோ
நான் இதுவரை 40 சீரியல்கள் இயக்கியுள்ளேன், ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் சொர்க்கவாசல் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இப்படம் வெளிவந்தால் எனக்கு இன்னும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan