படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை- யாருக்கு அந்த வாய்ப்பு பாருங்க
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
கடந்த வார கதையில் முத்து-மீனாவின் முதல் திருமண நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் ஸ்ருதியின் அம்மா வந்து மீனாவிற்கு வளையல் அணிவிக்க அதை வைத்து அவர் செய்த விஷயம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இப்போது அடுத்து சிட்டி பேச்சை கேட்டு சத்யா அண்ணாமலை வீட்டிற்கு வருவதால் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
பட வாய்ப்பு
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்தவரும் ஒரு நடிகைக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடரில் மீனாவின் தங்கை வேடமான சீதாவாக நடிக்கும் நடிகைக சங்கீதாவிற்கு கதாநாயகியாக நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
சங்கீதா லியோனி கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கு குற்றம் புதிது என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் என்பவர் இயக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.