ஒரே ஒரு ஊசி, அதனால் ஏற்பட்ட விளைவு- சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்து சோகமான விஷயம்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் பெயரை மக்களிடம் சொன்னாலே முத்து-மீனா, மனோஜ்-ரோஹினி, ரவி-ஸ்ருதி என நடிகர்களின் பெயர்களை மக்கள் உடனே கூறிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவி TRPயில் கடந்த சில வாரங்களாக டாப்பில் வந்த சிறகடிக்க ஆசை தொடர் கடந்த வாரம் 2வது வாரத்திற்கு தள்ளப்பட்டது.
தற்போது கதையில் ரவி-ஸ்ருதி பல போராட்டங்களுக்கு பிறகு அண்ணாமலை சம்மதத்துடன் வீட்டிற்கு வந்துள்ளனர், இனி என்ன நடக்கப்போகிறது, கதையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகையின் வருத்தம்
இந்த தொடரில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பாக்யஸ்ரீ. தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார்.
அப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில், 14 வயதில் சினிமாவிற்கு வந்தேன், என்னுடைய உடம்பை கொஞ்சம் குண்டாக்குவதற்காக ஊசி எல்லாம் போட்டேன்.
காரணம் அப்போதெல்லாம் நடிகைகள் கொஞ்சம் குண்டாகத் தான் இருப்பார்கள், வாய்ப்பு கிடைக்கும் என ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்தேன். பின் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணமும் நடந்தது.
அப்போது நடிக்க ஊசி போட்ட விளைவு என்னுடைய கர்ப்ப காலத்தில் தெரிந்தது. ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் ஊசி போட்டு குண்டானேன் என சோகமான விஷயத்தை கூறியுள்ளார்.