ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அண்ணாமலை வீட்டில் க்ரிஷ் பற்றி பேசப்படுகிறது.
மீனா வழியில் க்ரிஷ் பாட்டியை பார்த்ததும் அவர் கூறிய விஷயத்தையும் வீட்டில் கூற ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவிக்கிறார்கள். பின் வீட்டிற்கு வந்த அருண், முத்து நண்பன் தன்னிடம் தவறாக நடக்கிறான் உனக்காக தான் நான் அமைதியாக இருக்கிறேன்.
இதுபோல் மறுபடியும் உன் பெயர் மற்றும் முத்து பெயர் கூறி வம்பு செய்தால் சும்மா விடமாட்டேன் என கத்துகிறார். சீதா அருணை முழுவதுமாக நம்பி விடுகிறார்.
பின் எல்லா விஷயத்தையும் அறிந்த முத்து சீதாவை நேரில் சந்தித்து என் மீது கோபம் என்றால் என்னிடம் காட்டச்சொல் எனது நண்பர்களிடம் வேண்டாம். உனக்காக தான் நான் பொறுத்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு செல்கிறார்.
அடுத்து க்ரிஷ் அந்த பள்ளியில் இருக்க மாட்டேன் என புலம்பு ரோஹினி அவரை மிரட்டி அங்கேயே படிக்க கூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரவி ரெஸ்டாரன்டில் ஒருவர் பிரச்சனை செய்ய அவர் முத்துவை அழைக்கிறார்.
முத்து வந்த பிரச்சனை செய்பவரை அடிக்க அவர் ஸ்ருதி அம்மா சொல்லி தான் இப்படி பிரச்சனை செய்கிறேன் என கூறுகிறார். அடுத்து இது என்ன பிரச்சனை ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.