மனோஜால் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட முத்து, போலீஸ் அதிரடி.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களம் வரப்போவது நன்றாக தெரிகிறது.
இன்றைய எபிசோடில், விஜயா வழக்கம் போல் க்ரிஷை மோசமாக திட்ட அதுஒரு பேச்சு வார்த்தையாக போகிறது. பின் மனோஜ்-ரோஹினி இருவரும் ரதி வீட்டிற்கு சென்று பணம் தருவதாக கூறிய விஷயம் விஜயாவிற்கு தெரிய வருகிறது.
உடனே விஜயா அந்த பணத்தை ரோஹினி தான் தர வேண்டும் என கராராக கூறிவிட்டு செல்கிறார். இதனால் மனோஜ், தன்னை இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது காப்பாற்று என முத்துவிடம் கெஞ்சுகிறார்.
புரொமோ
மனோஜ் அழுது புலம்பியதால் முத்து இந்த பிரச்சனைக்கு ஒரு வழி யோசிக்கிறார்.
மீண்டும் அந்த பெண் வீட்டிற்கு முத்து போய் பேச அங்கு அடிதடி ஆகிறது, இதற்கு நடுவில் உள்ளே புகுந்து சிட்டி அடியாட்களும் போய் அடித்துவிடுகிறார்கள்.
இதனால் ஒரு குடும்பத்தையே முத்து அடித்துவிட்டார் என போலீஸ் அவரை கைது செய்ய வீட்டிற்கு வருகிறது.

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
