முத்துவிடம் வசமாக சிக்கிய நபர், நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் நீண்ட மாதங்களாக இருந்து வரும் தொடர்.
இப்போது கதையில், அவரவருக்கு ஒரு காட்சிகள் வைத்து வருகின்றனர். இன்றைய எபிசோடில், முத்து-மீனா விளையாடிக் கொண்டிருக்கும் போது விஜயா வர அவர் மீது தலையனை விழுந்துவிடுகிறார், இதனால் அங்கு பஞ்சாயத்து நடக்கிறது.
அடுத்து ரோஹினியிடம், வித்யா தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபரை அறிமுகப்படுகிறார். பின் ரோஹினியின் அம்மா அவரிடம் எல்லா உண்மைகளை கூறிவிடும் என கூறுகிறார். இப்படி எபிசோட் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிவுக்கு வருகிறது.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், முத்து-மீனா, வித்யாவின் புதிய வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க செல்கின்றனர், அங்கு தான் ஒரு டுவிஸ்ட்.
அதாவது மனோஜிடம் பணம் வாங்கிக்கொண்டு வீடு ஏமாற்றிய நபர் வருகிறார், முத்து கோபத்தில் அவரை தாக்குகிறார். அப்போது நாளை தரமான சம்பவம் இருக்கு என்பது நன்றாக தெரிகிறது.