முத்துவை பார்த்து அழைக்க சென்ற க்ரிஷ், ரோஹினிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி, சிக்கினாரா?- சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் கலகலப்பாகவே சென்றுள்ளது.
இன்றைய எபிசோடில் மீனா ஒருவர் தன்னை பாலோ செய்வதாக கூறியவர் வீட்டிற்கு வந்து பேசுகிறார். அவர் யார் என்ன என்பதை குடும்பத்தினர் விசாரிக்க முத்து வசமாக சிக்குகிறார்.
காரணம் அந்த நபரின் காதலுக்கு உதவி வருவது முத்து தான் என்பது நமக்கு தெரியும், அந்த விஷயம் குடும்பத்திற்கு தெரியவர கலகலப்பாக செல்கிறது.
பிறகு மனோஜ், தனது ரூ. 10 லட்சம் லாபம் வந்துள்ளதாக கூற வழக்கம் போல் விஜயா தனது மகன் பெருமையை பாட ஆரம்பிக்கிறார்.
அடுத்த வாரம்
எபிசோட் இறுதியில் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியானது. அதில், தனது மகனை கேஷுவலாக பள்ளிக்கு அழைத்து வருகிறார் ரோஹினி. அங்கு முத்துவை பார்த்த க்ரிஷ் அவரை கூப்பிட செல்ல ரோஹினி தடுக்கிறார்.
பின் ரோஹினி அண்ணாமலை அந்த பள்ளிக்கு செல்வதை கண்டவர் காவலாளியிடம் யார் அவர் என கேட்கிறார், அதற்கு அவர் புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் என்கிறார்.
ஒவ்வொரு முறையும் தப்பித்துக்கொண்டே வரும் ரோஹினி எப்போது தான் சிக்குவார் என தான் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.