முத்து சொன்ன வார்த்தையால் அதிர்ச்சி முடிவு எடுத்த மீனா... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவின் நண்பர் ஒருவர் தனது அண்ணாவின் திருமணத்திற்காக பத்திரிக்கை கொண்டு வருகிறார்.
வீட்டில் விஜயா, மனோஜ், ரோஹினி, மீனா, முத்து என எல்லோரும் வீட்டில் இருக்கிறார். முத்துவின் நண்பன் அண்ணா திருமணம் என்று சொன்னதும் உடனே தனது வீட்டில் அண்ணன் திருமணத்தில் நடந்த விஷயத்தை காமெடியாக கூறுகிறார்.
காமெடியாக கூறுவது போல் மீனாவை எனது தலையில் கட்டி வைத்தார்கள் என்று கூற உடனே விஜயா, மனோஜ், ரோஹினி 3 பேரும் வழக்கம் போல் அசிங்கப்படுத்துகிறார்கள்.
இதனால் மீனா சமையல் செய்யாமல் எல்லோரிடமும் கோபமாக பேசுகிறார்.
அடுத்த வாரம்
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த வார புரொமோ ஒளிபரப்புகிறார்கள்.
அதில் மீனாவை வீட்டில் முத்து தேட விஜயா இங்கே அவள் இல்லை என்கிறார். போன் செய்து பார்த்தாலும் ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார், இதனால் முத்து, வண்டி கூட இங்கே இருக்கிறது, மீனாவை காணவில்லை என ஷாக் ஆகிறார்.