சந்தோஷமாக பாட்டி ஊருக்கு சென்ற மீனாவிற்கு ஏற்பட்ட சோகம், ரோஹினிக்கு ஏற்பட்ட பயம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், க்ரிஷுடன் தனக்கு தெரியாமல் முன்னாள் கணவரின் உறவினர்களை சந்தித்தது தப்பு என தனது அம்மாவிடம் கோபமாக பேசுகிறார்.
தனது அம்மாவை திட்டிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார். தீபாவளியை கொண்டாட அனைவரும் ஊருக்கு செல்கிறார்கள். பாட்டி தனது குடும்பத்தினரை சந்தித்ததும் மிகவும் சந்தோஷப்படுகிறார், அவருடனான சில கலகலப்பான எபிசோட் செல்கிறது.
ஸ்ருதி கூறியதால் பாட்டி, விஜயாவை நடனம் ஆட வைக்கிறார். விஜயாவும் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார்.

ஷாக்கிங்
இந்த எபிசோட் நடுவில் மீனா வருத்தம் அடையும் வகையில் ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது, சாமி கும்பிட பாட்டி ஊரில் உள்ள கோவிலுக்கு மீனா-முத்து செல்கிறார்கள்.
அப்போது முத்து ஊர் நண்பர்களை சந்தித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு சாமியாடி, ஏன் இங்க வந்த என மீனாவிடம் கேட்கிறார். சாமி கும்பிட வந்தேன என கூறி மீனா முத்துவை அழைக்கிறார்.

அதற்கு அந்த சாமியாடி, விதி சரியில்லாதப்போ அந்த ஆண்டவனே கூப்பிட்டாலும் கேட்காது என சொல்கிறார். அந்த சமயத்தில் முத்து வர, மீனா பயத்தில் தடுக்கி விழுகிறார்.
அதைப்பார்த்த அந்த சாமியாடி, வாழ்க்கையே தடுக்கி விழப்போகுது, இதுல கால் தடுக்கி விழுந்தா என்ன என சொல்லிக்கொண்டே கோவிலை விட்டு வெளியே கிளம்புகிறார். அதைக் கேட்டதில் இருந்து மீனாவின் மனநிலை சரியில்லை, சோகத்திலேயே உள்ளார்.
அதே சாமியாடி, ஊருக்கு வந்த ரோஹினியின் தோழி மகேஷ்வரியையும் பயமுறுத்துகிறார், இதைக் கேள்விப்பட்டு ரோஹினியும் கொஞ்சம் குழம்புகிறார்.
