மீனாவை பார்த்து பயந்த மலேசியா மாமா.. சிக்குவாரா ரோகிணி! சிறகடிக்க ஆசை ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் கதாநாயகன் வெற்றி வசந்திற்கு சமீபத்தில் தான் நடிகை வைஷ்ணவியுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பதை குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி, மீனா இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு வருகிறார். அந்த கடையில் மலேசியா மாமா என ஏமாற்றியவர் அங்கு வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்.
ப்ரோமோ வீடியோ
மீனா தன்னை பார்த்துவிட கூடாது என்பதற்காக துண்டை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டு தப்பிவிடுவிக்கிறார். பின் ரோகிணியை சந்திக்கும் அவர், நான் மாட்டிக்கொண்டால், உன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் அனைவரிடமும் கூறிவிடுவேன், என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.
இதன்பின், ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ..