முத்துவின் போனை எடுத்து வேலையை முடித்த ரோஹினி, அடுத்து நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியில் டாப்பில் இருக்கும் இந்த தொடரில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களமாக அமைந்து வருகிறது.
சத்யா, விஜயாவின் பணத்தை திருடிய வீடியோவை முத்துவிடம் இருந்து எடுக்க ரோஹினி என்னென்னவோ பிளான் செய்கிறார்.
முதலில் அவரே எடுக்க பார்த்தார் முடியவில்லை, பின் அவரது தோழி வித்யாவை வைத்து எடுக்க பிளான் செய்ய அதுவும் சொதப்பியது.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோடில் வழக்கம் போல் விஜயா, மீனாவை நிறைய விஷயங்களில் குத்திகாட்டிகொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் விஜயாவை ஐஸ் வைக்க ரோஹினி மற்றும் மனோஜ் இருவரும் புடவை வாங்கி கொடுக்கிறார்கள்.
நாளைய புரொமோவில், முத்து போனை எடுத்த ரோஹினி மற்றும் வித்யா கிச்சனில் வீடியோவை அனுப்பும் வேலையை செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் திடீரென மீனா மற்றும் முத்து ஓடி வர ரோஹினி கையில் இருக்கும் போன் கீழே விழுந்துவிடுகிறது. பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.