விஜயா நேரடியாக கூறிய விஷயம், ஷாக்கில் முத்து-மீனா... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் மனோஜிடம் இருந்து எப்படியோ குடும்பமே பெரிய போராட்டத்திற்கு பிறகு நடித்ததற்கான பணத்தை வாங்கிவிட்டனர்.
பணத்தை வாங்கிய மீனா, முத்துவின் கடனை அடைத்துள்ளார், அண்ணாமலையும் முத்துவின் டியூ கட்ட அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அந்த காட்சிகள் கொஞ்சம் எமோஷ்னலாக செல்கிறது. பின் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க செல்கிறார், அங்கு விஜயா வழக்கம் போல் அவரை அவமானப்படுத்துகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயா பார்வதியின் பணம் காணாமல் போனது போல் பேசுகிறார்.
பின் வீட்டிற்கு யாரும் வரவில்லையே பின் எப்படி பணம் காணாமல் போயிடும் என்று கூறி உன் வீட்டிற்கு மீனா தானே வந்தாள் என கூறுகிறார். இதைக்கேட்டு முத்து-மீனா இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
