யாரும் எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்த மீனா, செம ஷாக்கில் விஜயா, மனோஜ், ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விறுவிறுப்பின் உச்சமாக, குடும்ப பாங்கான கதைக்களத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.
க்ரிஷ் கண் பிரச்சனைக்காக சென்னை வர எதர்சையாக முத்து-மீனா கண்ணில் பட அப்படியே வீட்டிற்கும் வந்தார்கள்.
க்ரிஷ் மற்றும் அவரது பாட்டியை எவ்வளவு கேவலமாக பேச முடியுமா அப்படியெல்லாம் விஜயா பேசியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம் பிடித்திருந்தாலும் விஜயாவிற்கு கொடுக்கும் வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
அதிலும் குழந்தையை பார்த்து விஜயா பேசும் வார்த்தைகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நாளைய புரொமோ
இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் நாளைய எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில் சமையக்கவில்லையா என விஜயா மற்றும் ரோஹினி மீனாவை பார்த்து கேட்டிகிறார்கள்.
அதற்கு மீனா கிட்சனில் எல்லாம் இருக்கிறது காய்கறிகள் உள்ளது நீங்கள் சமைத்துக் கொள்ளலாம் அல்லவா என கேட்கிறார்.
அவர் சொன்ன பதிலை கேட்டு முத்துவே அசந்து போய் நிற்கிறார். முத்து சொன்னால் கூட கேட்காமல் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்யும் மீனா ஏன் சமைக்கவில்லை என்ன விஷயம் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.
You May Like This Video