இன்னொரு தொடரில் நடிக்க வந்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த்- எதில் பாருங்க, வீடியோ இதோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் நாயகன், அவரை கூல் செய்யும் வகையில் அமைந்த மனைவி மீனா.
அதன்பின் கோபத்தை ஏற்படுத்தும் நாயகனின் அம்மா, பாசமுள்ள அப்பா என சீரியலே அனைவரும் கொண்டாடும் விதமாக இருக்கிறது.
தற்போது கதையில் பொங்கல் கொண்டாட்ட ஸ்பெஷல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில் ரோஹினி மாமாவாக நடிக்க வந்தவர் என்ட்ரி கொடுத்துள்ளார், அடுத்தடுத்து என்னென்ன நடக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.
புதிய தொடர்
தற்போது வெற்றி வசந்த் தொடரில் நடித்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் நாயகி பொன்னியின் உறவினராக என்ட்ரி கொடுக்க உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் முத்து என்கிற வெற்றி வசந்த்.
இதோ அவர் பொன்னி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புரொமோ,