சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவை கைது செய்த போலீஸ்.. முன்னாள் மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா பல படங்களில் நடித்து இருக்கிறார்.
வீரம், அண்ணாத்த, கலிங்கா போன்ற பல படங்களில் நடித்து இருக்கும் அவர் 2019ல் அம்ருதா என்பவரை காதல் திருமணம் செய்தார். ஆனால் அது விவகாரத்தில் முடிந்தது.
அதன் பிறகு 2021ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் பாலா. எலிசபெத் என்ற டாக்டரை இரண்டாம் திருமணம் செய்த அவர் முதல் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கைது
முதல் மனைவியையும் மகளையும் அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதனை தொடர்ந்து இன்று காலை போலீசார் நடிகர் பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர்.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan