கடந்த ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான சீதா ராமம் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
சீதா ராமம்
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் சீதா ராமம்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மிருனாள் தாகூர் என்பவர் நடித்திருந்தார். இதற்கு முன் இவர் ஹிந்தியில் சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட சீதா ராமம் திரைப்படம் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எற்படுத்தி கொடுத்துள்ளது.
மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். தெலுங்கில் உருவான இப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தெலுங்கில் மட்டுமே ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 13 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் ரூ. 97 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.
சந்திரமுகியாக மாறிய கங்கனா.. வெளிவந்த First லுக் போஸ்டர்