சூப்பர் சிங்கர் சிவாங்கியின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. அவரே வெளியிட்ட புகைப்படம்
பாடகி சிவாங்கி
டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி தொடர்ந்து மூன்று சீசன்களாக கலக்கி வருகிறார்.
இதன்முலம் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
பின்னணி பாடகியும், நடிகையுமான சிவாங்கியின் தாய் ஒரு பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமார் என்பதை நாம் அறிவோம். அவர் அவ்வப்போது சூப்பர் சிங்கரின் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
சிவாங்கியின் தந்தை
ஆனால், சிவாங்கியின் தந்தை கிருஷ்ணகுமாரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில், இன்று தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடும் சிவாங்கி, அவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Also See This : Reaction Queen Sivaangi கலக்கிட்டாங்க? Vadivelu | Naai Sekar Returns Audio Launch