இந்த வாரமும் குக் வித் கோமாளிக்கு வராத சிவாங்கி.. காரணம் இதுதான்!
குக் வித் கோமாளி ஷோ மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அதற்கு முன்பு அவர் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த புகழ் மூலமாக சிவாங்கி தற்போது சினிமாவிலும் நுழைந்திருக்கிறார். டான் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.
தற்போது குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சிவாங்கி முக்கிய கோமாளியாக கலந்துகொண்டு வந்தார். ஆனால் கடந்த வாரம் சிவாங்கி ஷோவிற்கு வரவில்லை. இந்த வாரமாவது வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் இந்த வாரமும் சிவாங்கி வரவில்லை.
காரணம்
இன்றைய எபிசோடில் சிவாங்கி வரததற்கான காரணத்தை ரக்ஷன் கூறினார். சிவாங்கி அவரது அண்ணன் திருமணத்திற்கு செல்வதால் ஷோவுக்கு வரவில்லை என கூறி இருக்கிறார்.
சிவாங்கிக்கு பதிலாக இந்த முறை சரத் ஷோவில் பங்கேற்று இருக்கிறார்.
டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் தமிழ் சீரியல்கள் லிஸ்ட்