என் வாழ்க்கையில என்ன நடக்குது.. CWC-யில் உச்சகட்ட அதிர்ச்சியில் சிவாங்கி
சிவாங்கி
குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். கடந்த வாரம் ராஜ் ஐயப்பா வெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எபிசோடுகளின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதிர்ச்சியில் சிவாங்கி
இந்த வார டாஸ்கின் அட்வான்டேஜ் சுற்றில் மைம் கோபி தான் ஜெயித்து இருக்கிறார். அதை வைத்து அவர் போட்டியாக நினைக்கும் மற்றொரு போட்டியாளர் ஒருவருக்கு ingredient மாற்றி கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என எல்லோரும் கேட்க அவர் சிவாங்கியை தேர்வு செய்து அவருக்கு பாகற்காயை வைத்து சமைக்க சொல்கிறார்.
இதை கேட்டு சிவாங்கி கடும் அதிர்ச்சி ஆகிறார். 'என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என சொல்லுங்க' என சோகத்துடன் கூறி இருக்கிறார். அந்த ப்ரோமோ இதோ..
குஷ்பு சின்ன வயசில் இந்த வேலைக்கு போக ஆசைப்பட்டாராம்! நடக்காமல் போனது ஏன்?