நாயகன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகர் தானாம்! யார் தெரியுமா
நாயகன்
தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களில் ஒன்று நாயகன். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம், மும்பையை சேர்ந்த வரதராஜன் முதலியார் எனும் உண்மையான கேங்ஸ்டர் வாழ்க்கையை மையாக வைத்தும் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் நாயகன் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாயகன் படத்தை தயாரித்த முக்தா பிலிம்ஸ் தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி சமீபத்தில் நயகன் படம் குறித்து பேசியுள்ளார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
இதில் பேசிய அவர் இப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தார், பின் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :
"ஹாலிவுட்டில் வெளிவந்த காட் பாதர் படத்தை தழுவி தான் இப்படத்தை எடுக்க முடிவு செய்திருந்தோம். அப்போது இப்படத்தை மணி ரத்னம் இயக்குவதாக இல்லை. சிவாஜி கணேசன், கமல் ஹாசன் மற்றும் அமலா இவர்கள் மூவரை மட்டுமே இப்படத்தில் கமிட் செய்திருந்தோம். பின் நடந்த சில விஷயங்களால் இப்படத்தில் இருந்து சிவாஜி கணேசன், அமலா நீக்கப்பட்டனர். மணி ரத்னம் படத்திற்குள் வந்து, மும்பையை சேர்ந்த வரதராஜன் முதலியார் கேங்ஸ்டர் கதையை வைத்து நாயகன் படத்தை இயக்கினார்" என முக்தா ரவி பேசியுள்ளார்.