ஹீரோவாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன்.. வெளிவந்த வீடியோ இதோ
லெனின் பாண்டியன்
அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம்தான் லெனின் பாண்டியன். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க கங்கை அமரன், ரோஜா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சிவாஜி கணேசனின் பேரன்
மேலும் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகன் ஆவார்.

இந்த நிலையில், தற்போது லெனின் பாண்டியன் படத்திலிருந்து தர்ஷன் கணேசன் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கார்த்தி இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிமுகமாகியுள்ள தர்ஷன் கணேசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ:
Best wishes dear @DhaarshanG! Proud to see you make it to the big screen with Lenin Pandiyan! Blessings of Sivaji Ganesan sir will always be with you. ❤️@SathyaJyothi @ddb2411 #GangaiAmaren @RojaSelvamaniRK @subbu6panchu #லெனின்பாண்டியன் pic.twitter.com/OB4xESC1U2
— Karthi (@Karthi_Offl) November 7, 2025