ஷங்கர் முதலில் சொன்னது வேற கதை.. அங்கவை, சங்கவை சர்ச்சைக்கு நடிகர் விளக்கம்
சிவாஜி
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய ஹிட் ஆன படம் சிவாஜி. அதில் ஹீரோயினாக ஸ்ரேயா நடித்து இருப்பார்.
ஸ்ரேயா வீட்டுக்கு செய்து ரஜினி மற்றும் அவரது நண்பர் விவேக் இருவரும் அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கும்போது அருகில் வசிக்கும் நபராக வரும் சாலமன் பாப்பையா தனது இரண்டு மகள்களையும் அறிமுகப்படுத்துவார். கருப்பாக இருக்கும் பெண்களை காட்டி 'அங்கவை, சங்கவை' என பெயர்களை கூறுவார்.
ஷங்கர் படத்தில் இப்படி ஒரு நிறவெறி காமெடி வந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் சாலமன் பாப்பையாவை அதிகம் பேர் திட்டினார்கள்.
நடிகர் ராஜா விளக்கம்
அதே படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"ஷங்கர் முதலில் சொன்ன கதை வேறு, கருப்பாக இருக்கும் ஹீரோவுக்கு சிவப்பான ஹீரோயின் கிடைப்பது போல, கருப்பாக இருக்கும் அந்த இரண்டு பெண்களுக்கும் சிவப்பான மாப்பிள்ளை கிடைப்பது போல தான் கதை இருந்தது. ஆனால் படத்தில் இறுதியில் அது வரவில்லை" என கூறி இருக்கிறார்.
நடிகை ரோஜா கட்டியிருப்பது வீடா அல்லது பங்களாவா?- படு பிரம்மாண்டமான புதிய வீடு

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
