என்னது நடிகை த்ரிஷாவுடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ளாரா.. வீடியோ பாருங்க
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. அதுவும் தனது முன்னணி நடிகை என்கிற மார்க்கெட்டை இழக்காமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
பொன்னியின் செல்வன், லியோ, கோட் படங்களை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் இவர் கைவசம் படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவுடன் சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இதுவரை 22 படங்கள் வெளிவந்துள்ள நிலையில், இதில் எந்த படத்திலும் அவர் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடித்தது இல்லை.
ஆனால், சினிமாவில் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து சோப் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆம், அந்த சோப் விளம்பரங்களின் வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது, அதை நீங்களே பாருங்க.
இதோ அந்த வீடியோ..
#Sivakarthikeyan and #Trisha’s soap advertisements ✨ pic.twitter.com/QUuerDVq62
— Kajanthini (@Kajanthini03) May 20, 2024