ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடி வரும் அமரன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் அமரன்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ராணுவ வீரரின் கதை மட்டுமின்றி இது ஒரு காதல் கதையும் கூட என்பது படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது தெளிவாக புரிகிறது.
ப்ரீ புக்கிங்
வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் அமரன் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் துவங்கிவிட்டது.

இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 70 லட்சத்திற்கும் மேல் அமரன் படம் வசூல் செய்துள்ளது என்றும், இது சிவகார்த்திகேயன் படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என்றும் கூறப்படுகிறது.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri