அந்த விஷயத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் கொஞ்சம் கூட ராசி இல்லை.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இதுவரை ரூ. 80 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வெளியாகிறது.
வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்தின் மொத்தம் 4500 சி ஜி காட்சிகள் இருப்பதினால் ரீலிஸ் தாமதம் ஆகிறது என கூறப்பட்டது.
ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
ஆனால், இறுதியாக இந்த ஆண்டு திபாவளிக்கு அயலான் வெளியாகும் என அறிவிப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். ஆம், தீபாவளிக்கு அயலான் திரைப்படம் வெளியாக வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், இந்த முறை தீபாவளிக்கு வெளிவரவிருந்த அயலான் தள்ளிப்போய் இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்கும் தீபாவளிக்கும் ராசி இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்.. மகளுக்காக தந்தை ஷங்கர் எடுத்த முடிவு

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
