அஜித், விஜய், ரஜினி பட சாதனைகளை தமிழகத்தில் முறியடித்த சிவகார்த்திகேயனின் டான்- செம வசூல்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் கல்லூரி கலாட்டா, சென்டிமென்ட், காதல் என அனைத்தும் படத்தில் கலந்து இருந்தது.
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
படத்தின் வசூல்
உலகம் முழுவதும் 12 நாட்களில் ரூ. 100 கோடி வரை வசூலித்த இப்படம் இப்போது தமிழகத்திலேயே அந்த வசூலை பெற இருக்கிறது. அதாவது நேற்றைய வசூல் வரை படம் தமிழகத்தில் ரூ. 82 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
விரைவில் படம் ரூ. 100 கோடி தமிழகத்தில் மட்டுமே தொடும் என்கின்றனர்.
ரூ. 82 கோடி வசூலித்து வேதாளம், கபாலி, தெறி, ஐ, நேர்கொண்ட பார்வை பட தமிழக வசூலை முறியடித்துள்ளது.
விக்ரம் முழு படத்தை பார்த்த முக்கிய நடிகர் விமர்சனம்! படம் ஹிட் ஆகுமா?