சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் இதுவே முதல்முறை ! டான் படத்தை பிரம்மாண்ட வசூல் சாதனை..
டான் திரைப்படம் செய்த சாதனை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான் டான் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியை படைத்துள்ளது.
உலகளவில் அப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. டான் படத்திற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது டான் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ஆம், அதன்படி டான் திரைப்படத்திற்கு தமிழ்நாடு திரையரங்க ஷேர் மட்டும் ரூ.40+ கோடி கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் முதல்முறையாக அவரின் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் இவ்வளவு ஷேர் கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாட்கள் ஆனது, விக்ரம் இதுவரை உலகம் முழுவதும் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
