நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்- யாருடன் புகைப்படம் எடுத்தார் பாருங்க
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். ஆரம்ப காலங்களில் மெமிக்ரி, டிவி தொகுப்பாளராக பணியாற்றி படிப்படியாக தமிழ் சினிமாவில் தற்போதைய உயரத்துக்கு வந்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் படங்கள்
கடைசியாக இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் 9ம் தேதி வெளியாகி இருந்தது. விமர்சனங்கள் நன்றாக வர ரசிகர்களும் படத்தை கொண்டாட படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. படம் தெலுங்கிலும் வருண் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.
அடுத்து சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. காரைக்குடி, பாண்டிச்சேரி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
சொந்த ஊரில் நடிகர்
திருவீழிமிழலை, திருநள்ளாறு சென்றுள்ளார். இதில் திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர், இந்தியாவோட தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள் ஆவார்கள்.
திருவீழிமிழலைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களையும், மக்களையும் சந்தித்தார். பின் சந்நீஸ்வர பகவான் கோவிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.
விஜய், அஜித்திற்காக ஷோபா சந்திரசேகர் செய்த விஷயம்- கலக்கல் வீடியோ