இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பு.. வெளிவந்த சிவகாத்திகேயனின் வீடியோ
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வரும் திரைப்படம் பராசக்தி. ஃபவர்புல் தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் மட்டுமின்றி அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தென்னிந்திய சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இலங்கையில் சிவகார்த்திகேயன்
இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இலங்கை சென்ற சிவகார்த்திகேயன் நேற்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சிவகார்த்திகேயன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Welcome to Sri Lanka @Siva_Kartikeyan Anna ❤️🧡 #Parashakthi #Sivakarthikeyan #SriLanka #Colombo #LK pic.twitter.com/Z6w6qula0h
— Satheesh Nagendran (@Sathenagprof) March 9, 2025

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
