அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இவர், அடுத்ததாக மதராஸி படத்துடன் செப்டம்பர் 5ம் தேதி களமிறங்குகிறார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நடிகர்
உலகளவில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என பெரியவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதை சில சமயங்களை கண்கூடாக அனுபவம் செய்திருப்போம்.

அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருடைய பெயர் ஜெய்சீலன் சிவராம். இவரும் ஒரு நடிகர்தான். அசோக் செல்வனுடன் இணைந்து சபா நாயகன் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் தற்போது மிர்ச்சி செந்தில் நடிப்பில் உருவாகியுள்ள போலீஸ் போலீஸ் எனும் வெப் தொடரில் இரண்டாம் கதாநாயகனாக ஜெய்சீலன் சிவராம் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷபானா நடித்துள்ளார்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri