சம்பள பாக்கி காரணமாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு !
நீதிபதியின் புதிய உத்தரவு
கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் Mr.லோக்கல். அண்மையில் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
அதில் அப்படத்திற்காக பேசப்பட்ட 15 கோடி சம்பளத்தில் 11 கோடி மட்டுமே தந்துள்ளதாகவும் , மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும் என்றும் சம்பள பாக்கியை தரும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும், தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஞானவேல் ராஜா தரப்பு, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பெயரிலே மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும், இதனால் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அபராததுடன் இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என பதில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்து இவ்விவகாரத்தில் தீர்வுகாண உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து ஞானவேல் ராஜா படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததால் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் திருமணத்திற்கு முன் எடுத்த முடிவு!